என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாக்டர் கிருஷ்ணசாமி"
திண்டுக்கல்:
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் வினயை சந்தித்து தேவேந்திர குல வேளாளர் ஜாதியை பட்டியல் இனத்தில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என கிராம மக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனுவாக அளித்தார். அதன் பின் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
5 மாநில தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநில பிரச்சினைகளை எதிரொலித்தே அமையும். எனவே இதற்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் சம்பந்தம் கிடையாது. இந்த தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது.
இந்த முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. இருந்தபோதும் தற்போது ஏற்பட்ட தோல்வியை பா.ஜ.க. எச்சரிக்கையாக கருதி வரும் நாட்களில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults
அவனியாபுரம்:
மதுரை விமான நிலையத்தில் புதிய தமிழம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில் 2 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்ற செலவு.
மேலும் அந்த பகுதியில் நடைபெறும் அரசு வேலை திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும். எனவே தேர்தல் ஆணையம் 2019-ல் நடைபெறும் பொதுத் தேர்தலோடு இதனையும் நடத்தலாம்.
தேவேந்திரகுல வேளாள மக்கள் பண்டைய காலத்திலிருந்து இலக்கியங்களில மேகுத நில மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
திராவிட இயக்கங்கள் 70 ஆண்டுகள் மோசடி செய்து அவர்களை பின்தங்கிய சமூகமாக மாற்றியுள்ளது.
இட ஒதுக்கீடு இல்லாமல் தங்களது திறமையால் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் முன்னேறி வந்துள்ளனர்.
தேவேந்திரகுல வேளாளர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.
திருமாவளவன் 2003-04ல் குறிப்பாக ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தபோது தனது பெயரை மாற்றி வெளிநாட்டு தொடர்பில் உள்ளார்.
அவருக்கு வழங்கப்பட உள்ள முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் பேராசிரியரிடம் ஆய்வறிக்கை குறித்து புகார் அளித்துள்ளோம். இதனை மீறி முனைவர் பட்டம் வழங்கினால் நீதிமன்றம் செல்வோம்.
நடிகர்கள் ஓய்வுக்குப்பின் மற்றொரு இடம் தேவை என்பதால் அரசியலுக்கு வருகிறார்கள்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். #DrKrishnasamy
நெல்லை:
நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் 6 வித பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 77 ஜாதி பட்டியலில் உள்ள பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். தேவேந்திரகுல வேளாளர்களை தனியாக பிரித்து பிற்பட்டோர்பட்டியலில் சேர்க்க வேண்டும். பின்னர் அதற்கு தக்க பிற்பட்டோர் பிரிவு இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி அக்டோபர் 6-ந் தேதி திருச்சியில் இளைஞரணி மாநாட்டில் வலியுறுத்துவோம்.
சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 1980-81 ம் ஆண்டு நடந்த மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தை ஆய்வு செய்து அதற்காக ஒருவருக்கு டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் பல தவறுகள் நடந்துள்ளது. உடனடியாக இதை நிறுத்தவேண்டும். வருகிற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் புதிய தமிழகம் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார். #krishnasamy #tamilnadugovernment
மதுரை
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:-
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர புதிய தமிழகம் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக குரல் கொடுத்தது. இதற்கு மத்திய அரசு செவி சாய்த்து எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க உத்தரவிட்டது. மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய முயற்சி எடுத்தது. இதற்காக மத்திய, மாநில அரசுகளை பாராட்டுகிறேன்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அனைத்து தலைவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாறுகளை இருட்டடிப்பு செய்யக் கூடாது.
இதனை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது பல கிராமங்களில் சாதி ஏற்றத்தாழ்வு இருப்பதை பார்த்தேன். கவிஞர் பாரதிதாசன் கூறியது போல் சாதி ஒழித்தல், நல்ல தமிழ் வளர்த்தல் ஆகியவை மிகவும் அவசியம். இதில் ஒன்றை தவிர்த்தாலும் மற்றொன்று துலங்காது.
தமிழகத்தில் தமிழ் உணர்வு எவ்வளவு அவசியமோ அதே போல சாதிய ஒழித்தல் அவசியம்.
தமிழகத்தில் எடப்பாடி அரசு செயல்படாத நிலையில் உள்ளது. எனவே ஆளுநர் சுற்றுப்பயணம் மூலம் அரசு எந்திரங்களை செயல்பட வைக்கிறார். இதனால் மாநில சுயாட்சி கேள்விக்குறியாக உள்ளது. இதனை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #krishnasamy #tngovt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்